ஜே.வி.பியின் தீர்மானத்தால் கவலையில் ஜனாதிபதி; அனுரகுமாரவுக்கு பறந்த கடிதம்!

  Fayasa Fasil
By -
0




சர்வகட்சி அரசாங்கமொன்றை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடலில் பங்குபற்றுவதில்லை என்ற அனுர குமாரவின் தீர்மானம் கவலைக்குரியது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கம் தொடர்பாக ஜனாதிபதியுடனான கலந்துரையாடலுக்கு ஜே.வி.பிக்கு நேற்று(10) நேரம் வழங்கப்பட்டிருந்தது.

ஆயினும் குறித்த கலந்துரையாடலில் தாங்கள் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும், சர்வகட்சி அரசாங்கத்தில் எந்த வகையிலும் இணைந்து கொள்ளப் போவதில்லை என்றும் ஜே.வி.பி. நேற்று முன்தினம் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தது.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் நேற்று மாலை ஜனாதிபதி தரப்பில் இருந்து அனுர குமார திசாநாயக்கவுக்கு பதில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில், கலந்துரையாடலில் கலந்து கொள்வதில்லை என்ற ஜே.வி.பியின் தலைவர் அனுர குமாரவின் தீர்மானம் குறித்து கவலையடைவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் ஜே.வி.பி. தனது ஒத்துழைப்பை வழங்கும் என்று தான் தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)