அத்தனகல்ல பிரதேச சபை பட்ஜெட் 10 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் ; திசைகாட்டி (29), தராசு (02) உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிப்பு, ஒருவர் வாக்களிக்கவில்லை (விபரம்)

Rihmy Hakeem
By -
0

 


இன்றைய தினம் (25) இடம்பெற்ற அத்தனகல்ல பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்திட்டம் 10 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 


ஆதரவாக 31 வாக்குகளும் எதிராக 21 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன. தேசிய மக்கள் சக்தியின் 29 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் (தராசு) 02 உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்த நிலையில் தேசிய மக்கள் சக்தியின் ஒரு உறுப்பினர் வாக்கெடுப்பின் போது சபைக்கு சமூகமளித்திருக்கவில்லை. 


ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, மக்கள் முன்னணி (PA), சர்வஜன அதிகாரம் (பதக்கம்), ஐக்கிய தேசிய கட்சி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் வரவு - செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.


அத்தனகல்ல பிரதேச சபையின் தவிசாளர் தர்ஷண விஜேசிங்க "முன்னெப்போதும் இல்லாத, வெற்றிகரமான தொலைநோக்குப் பார்வையுடனும், எதிர்க்கட்சியின் ஆதரவுடனும் அத்தனகல்ல மக்கள் பெற்ற வெற்றி" என்று தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)