பிரமாண்டமான முறையில் இடம்பெற்ற இலங்கை ஜே.எம். மீடியா கல்லூரியின் 6ஆவது பட்டமளிப்பு விழா (படங்கள்)

Rihmy Hakeem
By -
0



இலங்கை ஜே.எம். மீடியா கல்லூரியின் 6ஆவது பட்டமளிப்பு விழா நவம்பர் மாதம் 22ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.


இலங்கை ஜே.எம் மீடியா தயாரிப்பு மற்றும் கல்லூரியின் தலைவரும், ஊடகவியலாளருமான சட்டமாணி ராஷிட் மல்ஹர்டீன் தலைமையில் மிக பிரமாண்டமாக நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக பேராசிரியர் கலாநிதி எம்.எஸ்.எம் ஜலால்டீன் கலந்து கொண்டார்.


கௌரவ அதிதிகளாக பிபிசி செய்தி சேவையின் முன்னாள் செய்தியாளரும் நியூஸ் வயர் செய்தி சேவையின் ஸ்தாகருமான அஸாம் அமீன் மற்றும் ஏ.ஒ.ஜி கெம்பஸின் இயக்குனர் ஷாகிர் தாரிக் ஆகியோர் கலந்து கொண்டனர். 


மேலும் சிறப்பு அதிதிகளாக, ஜே.எம் மீடியா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் வலையமைப்பு பொருளியலாளருமான ரஸா மல்ஹர்டீன், சிரேஷ்ட ஊடகவியலாளரும் வசந்தம் டிவி செய்தி வாசிப்பாளருமான ஜனரஞ்சன் யோகராஜ், வசந்தம் எப்.எம், டிவி செய்தி முகாமையாளர் சித்தீக் ஹனீபா, மூத்த ஒளி, ஒலிபரப்பாளர் யு.எல்.எம் யாகூப், மூத்த பத்திரிக்கையாளர் அமீர் ஹூசைன், வசந்தம் டி.வி செய்தி வாசிப்பாளர் சந்திரிக்கா ஆர்முகம், தினகரன் பத்திரிகையாளரும், பாதுகாப்பு அமைச்சின் தமிழ் ஊடகப் பொறுப்பாளருமான சாதிக் சிஹான் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இதன் போது வெகுஜன ஊடக கற்கை நெறி, புகைப்படக்கலை மற்றும் வீடியோகலை கற்கை நெறி ஆகியவற்றை நிறைவு செய்த சுமார் 200 மாணவர்கள் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர்.


மேலும் இந்த நிகழ்வில் ஊடகத்துறையின் முக்கியத்துவம் குறித்தும் ஊடக ஒழுக்கங்களுடன் கூடிய ஊடகவியலின் முக்கியத்துவம் குறித்தும் விரிவாக பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


ஜே.எம் மீடியா தயாரிப்பு மற்றும் கல்லூரியானது கடந்த 10 வருடங்களாக இலங்கை மற்றும் சர்வதேச ரீதியில் பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. மேலும், பிரயோக ரீதியில் ஊடக கற்கை நெறியை மிகச் சிறப்பாக வழங்கும் அரச டிவெக் (TVEC) அங்கீகாரம் பெற்ற ஒரே ஒரு ஊடக கல்லூரியாகவும் திகழ்கின்றது. இந்த வெகுஜன ஊடக கற்கை நெறியின் 21ஆவது குழுவும் புகைப்படக்கலை மற்றும் வீடியோ கலை கற்கை நெறியின் 13 ஆவது குழுவும் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். 


மேலதிக தகவல்களுக்கு 0777 128 348 ஐ தொடர்பு கொள்ளலாம்.










கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)