கஹட்டோவிட்ட 369/A பிரிவில் சமூக அபிவிருத்தி சபை நிறுவுவதற்கான கூட்டத்திற்கு அழைப்பு

Rihmy Hakeem
By -
0

 

படம் - AI

369A கஹட்டோவிட்ட மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் சமூக அபிவிருத்தி சபையை நிறுவுவதற்கான  விசேட கூட்டம் நாளை சனிக்கிழமை (15) இரவு 7.30 மணியளவில் இமாம் ஷாபி நிலையத்தில் நடைபெறவுள்ளது. 


இக்கூட்டத்தில் 369A - கஹட்டோவிட்ட மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு பொறுப்பான அரச அதிகாரிகள் கலந்துகொள்வதால், கஹட்டோவிட்ட மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த அனைவரும் கட்டாயம் கலந்துகொள்ளுமாறு விடயத்திற்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர் கேட்டுக்கொண்டுள்ளார். 


மேலும் 16 - 29 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஐவர் மற்றும் குறைந்தது பெண்கள் ஐவர் சமூக அபிவிருத்தி சபையில் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதால் கட்டாயம் குறித்த வயதெல்லையை சேர்ந்தவர்கள் மற்றும் பெண்களும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)