அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்கு முன்மொழியப்பட்ட முற்பணத்தொகை 25,000 ரூபாவாக அதிகரிப்பு

Rihmy Hakeem
By -
0
Pic - AI


 கடந்த சில நாட்களாக முழு நாட்டையும் பாதித்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள், அனர்த்தம் முடிவடைந்த பின்னர் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டும். எனினும், அவ்வாறு வீடுகளுக்கு திரும்ப தகுந்த சுகாதார ஆரோக்கிய நிலை இன்மையினால், அவ்வாறு திரும்புவது பிரச்சினையாக மாறியுள்ளது.


எனவே, அந்த வீடுகளை விரைவில் சுத்தம் செய்து, குடியிருப்புக்கு ஏற்றவாறு மீட்டெடுக்க வேண்டும்.


அந்த வகையில், பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்கு இதற்கு முன்னர் வழங்க முன்மொழியப்பட்ட பத்தாயிரம் ரூபா (ரூ.10,000.00) முற்பணத் தொகையை இருபத்தையாயிரம் ரூபாவாக (ரூ.25,000.00) உயர்த்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.


(அரசாங்க தகவல் திணைக்களம்)



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)