![]() |
| படம் - செயற்கை நுண்ணறிவு |
அண்மையில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகளைக் கருத்திற்கொண்டும், வருகின்ற நத்தார் பண்டிகையை முன்னிட்டும், 2025 டிசம்பர் மாதத்திற்காக மட்டும் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் ரூ. 5000 விசேட கொடுப்பனவை இதுவரை பெற்றுக்கொள்ளாத அனைத்து தாய்மார்களுக்கும், அதற்கான வவுச்சர் (Voucher) 2025.12.22 ஆம் திகதி, அதாவது வருகின்ற திங்கட்கிழமை காலை 9.30 மணி முதல் பிரதேச செயலகத்தினால் வழங்கப்படும் என்று அத்தனகல்ல பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ருவன் மாப்பாலகம தெரிவித்தார்.
கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் ரூ. 4500 பெறுமதியான போசாக்கு வவுச்சரைப் பயன்படுத்தி, 2025 டிசம்பர் மாதத்தில் பொருட்களைப் பெற்றுக்கொள்ளத் தவறிய அனைத்து தாய்மார்களும், 2025.12.28 ஆம் திகதி வரை அத்தனகல்ல பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் (Attanagalla MPCS) ஊடாக மட்டும் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

