அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கொலன்னாவ மற்றும் வெல்லம்பிட்டிய மக்களுக்கு கொழும்பு பெரிய பள்ளிவாசல் வழங்கிய நிவாரண உதவிகள்

Rihmy Hakeem
By -
0


இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கொலன்னாவ (Kolonnawa) மற்றும் வெள்ளம்பிட்டிய (Wellampitiya) மக்களுக்கு கொழும்பு பெரிய பள்ளிவாசல் (Colombo Grand Mosque) மூலம் 2 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான நிவாரண உதவிகள் நேற்றைய தினம் (12-12-2025) வழங்கி வைக்கப்பட்டது.


1.5 மில்லியன் ரூபா பண உதவி மற்றும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய இந்த நிவாரண உதவிகள், வெல்லம்பிட்டிய, கொலன்னாவ மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக, பிரதி அமைச்சர் முனீர் முளப்பரினால் புறக்கோட்டை மஸ்ஜித் சம்மேளனத்தின் (Pettah Masjid Federation) தலைவர் அஷ்ஷெய்ஹ் மௌலவி லமீர் ஹாபில் இடம் கையளிக்கப்பட்டது.


இன்று கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கொழும்பு பெரிய பள்ளிவாசலின் தலைவர் தாஹீர் ரஸீன், முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், சமயத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.











கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)