கம்பளை கெலி ஓயாவில் இலங்கை நபவிய்யா அமைப்பின் உறுப்பினர்கள் இன்றைய தினம் (13) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தப்படுத்தும் காட்சிகளை படங்களில் காணலாம்.
சுமார் 1500 பேர்கள் அளவில் கலந்து கொண்டுள்ள இந்த அமைப்பினரில் துறை சார் நிபுணர்களும் உள்ளடங்கியுள்ளனர்.
மின் சாதன பழுது பார்ப்பு மற்றும் மின் இணைப்பு கோளாறில் திருத்தம் , ஆடை கழுவும் இயந்திர கோளாறு திருத்தம், மற்றும் குளிர்சாதனப்பெட்டி திருத்தம், ஜுகி மஷின் இயந்திர திருத்தம் என பலதுறைகளிலும் இன்றைய தினம் பல ஊர்களையும் சேர்ந்த நபவிய்யா அமைப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை சிறப்பம்சமாகும்.
ஏற்கனவே கடந்த ஏழாம் திகதி முதற் கட்டமாக கம்பளை நகரில் ஆரம்பிக்கப்பட்ட இப்பணிகள் கெலி ஓயா நகரில் இரண்டாவது கட்டமாக இன்றைய தினத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
நன்றி - Kahatowita Nabaviyya Organization
நன்றி - Kahatowita Nabaviyya Organization








