கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தில் நிலவும் பல்வேறு குறைபாடுகளை பூர்த்தி செய்வதற்காக கல்வி அமைச்சின் மூலம் ரூபா 2 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் இன்சாப் தெரிவித்தார்.
முதற்கட்டமாக பாடசாலை வாசிகசாலையின் கூரைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றதாகவும் மேலும் பல்வேறு புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் உள்ளிட்ட குழுவினர் கஹட்டோவிட்ட பத்ரியா பாடசாலைக்கு வருகை தந்து அதன் குறைபாடுகளை நேரடியாக அவதானித்து உடனடியாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

