கம்பஹா மாவட்டத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக பொருட்களை வழங்கிய China International Rescue Center Group

Rihmy Hakeem
By -
0

சீன சர்வதேச மீட்பு மையக் குழுவினால் (China International Rescue Center Group) கம்பஹா மக்களுக்கு நிவாரண உதவிகள்



கம்பஹாவைச் சேர்ந்த திருமதி ஹியூ மின் டயஸ் பண்டாரநாயக்கவின் ஊடாக, ஜனாதிபதி செயலகத்தின் ஒருங்கிணைப்பில், சீன சர்வதேச மீட்பு மையக் குழுவினால் (China International Rescue Center Group) "திட்வா" (Dhitva) அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கம்பஹா மாவட்ட மக்களுக்கு உலருணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் நேற்று முன்தினம் (23) வழங்கப்பட்டன.


இந்த நிவாரணப் பொருட்கள் உத்தியோகபூர்வமாக கம்பஹா மாவட்டச் செயலாளர் லலிந்த கமகேவிடம் மாவட்ட செயலக வளாகத்தில் வைத்து கையளிக்கப்பட்டன.


இதனைத் தொடர்ந்து, மாவட்டச் செயலாளர் சீனக் குழுவினருடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.


இந்நிகழ்வில் கம்பஹா மாவட்ட மேலதிகச் செயலாளர்களான ஜே.டபிள்யூ.எஸ். கித்சிறி, ஆசிரி வீரசேகர, உதவி மாவட்டச் செயலாளர் நிலந்தி குமாரி, கம்பஹா மாவட்ட இடர் மேலாண்மை பிரதிப் பணிப்பாளர் அஜித் நிஷாந்த மற்றும் கம்பஹா மாவட்ட செயலக கணக்காளர் பத்ரா லசந்தி குணசேன உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

- கம்பஹா மாவட்ட ஊடகப் பிரிவு


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)