மல்வானை முபாரக் மௌலானா தக்கியாவில் இடம்பெற்ற, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இமாம்கள், முஅத்தின்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு..!

Rihmy Hakeem
By -
0


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மல்வானை மற்றும் பூகொடை பகுதிகளுக்காக கலாநிதி அல்-ஹாஜ் பசூல் ஜிப்ரி அவர்களின் ஸஹாரா நிதியத்தின் மூலம் வழங்கப்படவுள்ள Royal Happy Kitchen சமையலறை பொருட்கள் மற்றும் பள்ளிவாசல் இமாம்கள், முஅத்தின்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு இன்று (14) மல்வானை முபாரக் மௌலானா தக்கியா பள்ளிவாசலில் நடைபெற்றது.


மல்வானை நபவிய்யா இஸ்லாமிய இளைஞர் இயக்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கலாநிதி அல்-ஹாஜ் முஹம்மத் பசூல் ஜிப்ரி, அல்-ஹாபிழ் பாஸில் ஜிப்ரி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


இதன்போது, ஒவ்வொரு பகுதிகள் சார்பாக கலந்துகொண்ட பிரதிநிதிகளிடம் அவர்களின் பகுதிக்கான சமையலறைத் தொகுதிகள் கையளிக்கப்பட்டதுடன், மள்வானை 21 பள்ளிவாசல்கள் மற்றும் பூகொடை 2 பள்ளிவாசல்களின் இமாம்கள், முஅத்தின்களுக்கான நிதி உதவியும் வழங்கப்பட்டது. மேலும் உலமாக்களில் இருவரை உம்ரா பயணத்திற்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.


எதிர்காலத்தில் வெல்லம்பிட்டியிலும் பியகமயிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான சமையலறைத் தொகுதிகள் வழங்கப்படவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.


-- ஊடகப்பிரிவு








கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)