புதிய பஸ் சேவை ஆரம்பம்: கிரிந்திவெல - வேயங்கொட (185 கிளை வீதி ஊடாக)
எதிர்வரும் ஜனவரி 05 திங்கட்கிழமை முதல் கிரிந்திவெல - வேயாங்கொட 185 கிளை வீதி ஊடாக புதிய பஸ் சேவை ஒன்று ஆரம்பமாகவுள்ளதாக அத்தனகல்ல பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ருவன் மாப்பாலகம தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பயணப் பாதையானது கிரிந்திவலை மற்றும் வேயாங்கொடை நகரங்களை இணைக்கும் வகையில் பின்வரும் கிராமிய வீதிகள் ஊடாக முன்னெடுக்கப்படும்:
கிரிந்திவெல 👉 வல்கம்முல்ல 👉 ருவன்புர 👉 ருக்மலே 👉 புல்கஹமுல்ல 👉 கஹட்டோவிட்ட 👉 ருக்கஹவில 👉 போகஹமுல்ல 👉 வத்துபிட்டிவல 👉 நிட்டம்புவ 👉 வேயங்கொட.
என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை பரணகம மற்றும் மாத்தலான வட்டாரங்களில் வாழும் மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வந்த போக்குவரத்துப் பிரச்சினைக்குத் தீர்வாக, புதிய அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட மிகச் சிறந்த தீர்மானம் இதுவாகும் என்று அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் சம்பத் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

