கஹட்டோவிட்ட அல் முஸ்தபவிய்யா அஹதிய்யா பாடசாலையின் முப்பெரும் விழாவுக்கான அழைப்பு

Rihmy Hakeem
By -
0

 


கஹட்டோவிட்ட: கஹட்டோவிட்ட அல் முஸ்தபவிய்யா அஹதிய்யா பாடசாலையின் ஏற்பாட்டில், 1500வது மீலாதுன் நபி கொண்டாட்டம், பாடசாலையின் 20வது ஆண்டு நிறைவு விழா மற்றும் வருடாந்த பரிசு வழங்கல் விழா ஆகிய முப்பெரும் நிகழ்வுகள் நாளை‌ (14) மிக விமர்சையாக நடைபெறவுள்ளன.


நிகழ்வு விபரங்கள்:


திகதி: 2026 பெப்ரவரி 14, சனிக்கிழமை


நேரம்: பி.ப. 02.00 மணி


இடம்: முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கில் (Muslim Ladies Study Circle) மண்டபம், கஹட்டோவிட்ட.


சிறப்பு விருந்தினர்கள்:


இந்த விழாவில் கௌரவ விருந்தினர்களாகப் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்:


பிரதம அதிதி: கௌரவ முனீர் முளப்பர் (நாடாளுமன்ற உறுப்பினர் - சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர்).


சிறப்பு அதிதி: அல்ஹாஜ் M.R.M. ஸரூக் (தேசிய தலைவர் - இலங்கை அஹதிய்யா பாடசாலைகள் மத்திய சம்மேளனம்).


கௌரவ விருந்தினர்கள்: அல்ஹாஜ் M.M. முஹம்மது (ஓய்வுபெற்ற தேர்தல் ஆணையாளர் நாயகம்)


M.A.M.M. அஸ்மிர் SLPS (II) (அதிபர் - அல் பத்ரியா மகா வித்தியாலயம், கஹட்டோவிட்ட).


கலாநிதி S.M.M. நபீஸ் (பேராசிரியர் - தென்கிழக்கு பல்கலைக்கழகம்).


சிறப்பு விரிவுரையாளர்: மௌலவி M.N.M. இக்ராம் (ஃபாஸி).


அதிபர், ஆசிரியர்கள் உட்பட அஹதிய்யா பாடசாலை நிர்வாகக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழாவிற்கு அனைவரையும் அன்புடன் அழைப்பதாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)