அத்தனகல்ல பிரதேச செயலகத்தின் சேவைகளை பொதுமக்கள் மிகவும் இலகுவாகவும் விரைவாகவும் பெற்றுக்கொள்ளும் வகையில், அதன் உத்தியோகபூர்வ வாட்ஸ்அப் (WhatsApp) சேவை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் பொதுமக்கள் அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து நேரத்தை செலவிட வேண்டிய அவசியமின்றி, தங்களது கையடக்கத் தொலைபேசி ஊடாகவே தேவையான சேவைகளை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் சேவை ஊடாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகள்:
- பிரதேச செயலகத்தின் சேவைகள் தொடர்பான மேலதிக விபரங்கள்.
- அத்தியாவசிய விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளுதல்.
- தேவையான உத்தியோகத்தர்களுடன் தொடர்புகொள்ளும் வசதி.
- பிரதேச செயலகத்தின் ஈ-சேவை (e-service) பக்கத்திற்கு இலகுவாக பிரவேசித்தல்.
தொடர்புகொள்ளும் முறை:
அத்தனகல்ல பிரதேச செயலகத்தின் உத்தியோகபூர்வ வாட்ஸ்அப் இலக்கமான 070 645 7171 என்பதற்கு "HI" என குறுஞ்செய்தி (Message) ஒன்றை அனுப்புவதன் மூலம் இந்தச் சேவைகளை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம்.
பொதுமக்களின் நேரத்தையும் சிரமத்தையும் குறைக்கும் நோக்கில் இந்தத் நவீன தொழில்நுட்ப வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

