அத்தனகலு ஓயா (Aththanagalu Oya) நீரேந்துப் பகுதியில் நிலவும் காலநிலை காரணமாக விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் இன்று (2026 மே 23) காலை 6.00 மணிக்கு இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 22.05.2026 அன்று காலை 5.30 மணியளவில் அத்தனகலு ஓயா பகுதிக்கு வெளியிடப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கையானது, அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்கள்:
- அத்தனகலு ஓயாவின் அருகில் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
- இப்பகுதிகளினூடாக, பயணிக்கும் வாகன சாரதிகள் அதிக விழிப்புணர்வுடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், இந்த நிலைமையைக் கருத்திற் கொண்டு, அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் (Disaster Management Authorities) தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

