2026 ஆம் ஆண்டின் ஹஜ் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கும், இலங்கை யாத்திரிகர்களின் நலன்புரிகளை ஆராய்வதற்குமாக மத மற்றும் கலாசார விவகாரங்கள் பிரதி அமைச்சர் கௌரவ முனீர் முளப்பர் உள்ளிட்ட இலங்கை ஹஜ் தூதுக்குழுவினர் நேற்றைய தினம் (மே 23) சவூதி அரேபியாவின் ஜித்தாவில் அமைந்துள்ள கிங் அப்துல் அஸீஸ் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தனர்.
விமான நிலையத்திற்கு வருகை தந்த பிரதி அமைச்சர் உள்ளிட்ட தூதுக்குழுவினரை, ஜித்தாவிற்கான இலங்கை தூதுவர் நீதியரசர் எம். டீ. முஹம்மத் லபார் (Justice M.T Mohamed Laffar) அவர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் மிகவும் அன்போடு வரவேற்றனர்.

