146/A கஹட்டோவிட்ட அப்துர் ரஸ்ஸாக் பாத்திமா ரஈஸா கம்பஹா மாவட்டத்துக்கான சமாதான நீதவானாக நீதி மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
2026 ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தின் நீதவான் பீ.டப்.என்.டி. பியரத்ன முன்னிலையில் அவர் நேற்று (30) தனது பதவியைப் பொறுப்பேற்றார்.
பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரியான பாத்திமா ரயீசா, கல்வியியலில் பட்டப்பின் படிப்பை நிறைவு செய்துள்ளதோடு, கல்வி முகாமைத்துவத்தில் பட்டப் பின் படிப்பை மேற்கொண்டு வருகிறார்.
இலங்கை அதிபர் சேவை (SLPS) சித்தியுடன் தற்போது குமாரிமுல்லை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பிரதி அதிபராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கும் இவர், பல்வேறு சமூக நலப் பணிகளிலும் ஈடுபட்டு வருவதோடு ஊடகத்துறையில் திறமையாகச் சாதித்து வருகிறார்.
கஹட்டோவிட்டாவின் முதலாவது பெண் சமாதான நீதவானாகிய பாதிமா ரஈஸா, காலஞ்சென்ற மௌலவி ஆசிரியர் அப்துர் ரஸ்ஸாக், சித்தி பௌஸியா தம்பதியின் புதல்வியாவார்.
(Fiyaz Mohamed)

