அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் பாயிஸ் மற்றும் ரியாஸ் மொஹமட்டின் துரித செயல்பாட்டால் திஹாரியில் தீர்ந்த மக்கள் பிரச்சினை

Rihmy Hakeem
By -
0

 


கடந்த புதன்கிழமை (27) திஹாரிய மின்ஹாத் மாவத்தை அஸ்ஹரியா பள்ளிவாசலுக்கு முன்பாக அமைந்துள்ள, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்குச் சொந்தமான குழாயில் நீர்க்கசிவு ஏற்பட்டிருந்தது.


இது தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் செயற்பாட்டாளர் ரியாஸ் மொஹமட், அத்தனகல்ல பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் பாயிஸின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு சென்றார்.


இதனைத் தொடர்ந்து, கனரக வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, இப்பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காணப்பட்டது.


இந்தத் துரித நடவடிக்கையின் மூலம் பெருமளவிலான குடிநீர் வீண்விரயமாவது தடுக்கப்பட்டதுடன், அப்பாதையைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கும், பள்ளிவாசலுக்கு வருகை தரும் தொழுகையாளிகளுக்கும் ஏற்படவிருந்த அசௌகரியங்களும் தவிர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)