கம்பஹா மாவட்டத்தில் 09 A சித்தி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா - 2026 (விபரம்)

Rihmy Hakeem
By -
0

 


இம்முறை வெளியான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், கம்பஹா மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளில் '9 ஏ' (9A) சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பும் பரிசளிப்பு விழாவும் எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதியில் அல்லது செப்டெம்பர் மாத ஆரம்பத்தில் நடத்தப்படவுள்ளது.


​கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கிள் (Muslim Ladies Study Circle) ஏற்பாட்டில், 14ஆவது தடவையாகவும் இடம்பெறவுள்ள இந்நிகழ்வுக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளதாக அதன் தலைவரும், இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளருமான அல்ஹாஜ் அஹ்மத் முனவ்வர் தெரிவித்தார்.


​கம்பஹா மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளில் கல்வி கற்று, இம்முறை சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்தி பெற்ற மாணவர்கள், எதிர்வரும் ஜூலை 31ஆம் திகதிக்கு முன்னர் இதற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


விண்ணப்பிக்கும் முறை:


மாணவரின் பெயர், முகவரி, சுட்டிலக்கம் (Index Number), பெற்றோரின் விபரங்கள் மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை உள்ளடக்கி சுயமாகத் தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன், பாடசாலை அதிபரால் சான்றளிக்கப்பட்ட (Attested) பரீட்சைப் பெறுபேற்றுப் பத்திரத்தின் பிரதியையும் இணைத்து அனுப்ப வேண்டும்.


​விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

​தலைவர்,

முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கிள்,

கஹட்டோவிட்ட.

​விண்ணப்பங்களை மேற்சொன்ன முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பி வைக்குமாறு அல்லது நேரடியாகக் கையளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)