கம்பஹா மாவட்ட செயலகத்தில் 160 சாரதி பயிற்றுவிப்பாளர்கள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பட்டறை

Rihmy Hakeem
By -
0

 


கம்பஹா மாவட்டத்திலுள்ள சாரதி பயிற்சிப் பள்ளிகளின் சாரதி பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் சாரதி பயிற்சி உதவியாளர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வுப் பட்டறை, கம்பஹா மேலதிக மாவட்ட செயலாளர் ஜே.டபிள்யூ.எஸ். கித்சிறி அவர்களின் தலைமையில் நேற்றுமுன்தினம் (21) மாவட்ட செயலகத்தின் அக்ரா கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


​மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வழிகாட்டலில், அதன் கம்பஹா மாவட்ட பிரதி ஆணையாளர் அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்பட்டறையில் சுமார் 160 சாரதி பயிற்றுவிப்பாளர்களும் சாரதி பயிற்சி உதவியாளர்களும் கலந்துகொண்டனர்.


​செஞ்சிலுவைச் சங்கத்தின் பயிற்றுவிப்பாளர் துலித பெர்னாண்டோ அவர்களின் வளவாளர் பங்களிப்புடன், விபத்தொன்றின் போது நபர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்தல் மற்றும் முதலுதவி நடவடிக்கைகள் தொடர்பில் இங்கு தெளிவூட்டப்பட்டது. அத்துடன், சாரதி ஒழுக்கநெறிகள், ஒழுக்கமுள்ள சாரதியை உருவாக்குவதில் பயிற்றுவிப்பாளர்களின் பொறுப்பு, வீதி விதிகள், விபத்தொன்றின் போது செயற்பட வேண்டிய முறை, ஆலோசனைகள் மற்றும் மனதை மேம்படுத்துதல் ஆகிய தலைப்புகளின் கீழும் இப்பட்டறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


​இதற்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உதவி ஆணையாளர்களான சமில வாசனா முத்துகுமாரண, அருண பகீகம, சிரேஷ்ட மோட்டார் வாகன பரிசோதகர் எஸ்.ஆர். சேனாரத்ன, யக்கல நல்வைத்திய பல்கலைக்கழக விரிவுரையாளர் வைத்தியர் ஆர்.பி. லியனகே, யக்கல பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் காமிணி குமாரசிங்க ஆகியோர் வளவாளர்களாகப் பங்களித்தனர்.


​இந்நிகழ்வில் கம்பஹா மாவட்ட பிரதி மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் களண ஜயநந்த, மோட்டார் வாகன பரிசோதகர் பிரதீப் சஞ்சீவ, கம்பஹா மாவட்ட சாரதி பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் வசந்த சமன்சிரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மாவட்ட ஊடகப்பிரிவு 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)