கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தில் கடந்த இரண்டு வருடங்களாகப் பாடசாலை அபிவிருத்திச் செயற்குழுவில் (SDEC) அர்ப்பணிப்புடன் பணியாற்றிய முன்னாள் உறுப்பினர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் அனுபவப் பகிர்வும் கடந்த 19.07.2026 அன்று இரவு 8.30 மணிக்கு அதிபர் காரியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
புதிய SDEC உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் ஆசிரிய ஆலோசகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
பாடசாலையின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி, முன்னாள் செயலாளர் மற்றும் உறுப்பினர்களுக்கு இதன்போது நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கௌரவிக்கப்பட்ட முன்னாள் உறுப்பினர்கள்:
திரு. M.H.M. ரம்ஸான் (முன்னாள் SDEC செயலாளர்)
திரு. A.M.M. ரிஸ்வான்
திரு. M.S.M. சுலைமான்
திரு. M. ஃபஹீம்
பாடசாலையின் நல்வாழ்விலும் அபிவிருத்தியிலும் தோளோடு தோள் நின்று பணியாற்றிய முன்னாள் உறுப்பினர்கள் அனைவருக்கும் கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலய பாடசாலை சமூகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டன.

