பூகொடை, குமாரிமுல்லை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களின் பயன்பாட்டிற்காக புதிய குளிர்நீர் இயந்திரம் (Water Cooler) உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று (21.07.2026) பாடசாலை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் 'ஸஹாரா ஃபவுண்டேஷன்' (Zahara Foundation) அமைப்பின் தலைவரும், சிறப்பு விருந்தினருமான டாக்டர் அல்-ஹாஜ் முஹம்மது பசூல் ஜிஃப்ரி அவர்கள் கலந்துகொண்டு, தனது சொந்தப் பங்களிப்பில் வழங்கப்பட்ட குளிர்நீர் இயந்திரத்தை பாடசாலை சமூகத்திடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.
மாணவர்களின் அத்தியாவசியத் தேவையை உணர்ந்து இவ்வாறான பயனுள்ள சேவையை முன்னெடுத்த டாக்டர் அல்-ஹாஜ் முஹம்மது ஃபஸுல் ஜிஃப்ரி அவர்களுக்கு, பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் சார்பில் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தகவல்:
ரயீஸா ரஸ்ஸாக் (Raeesa Razzak)
பிரதி அதிபர்
குமாரிமுல்லை முஸ்லிம் மகா வித்தியாலயம் (KMMV)





