களுத்துறை சோனகத் தெரு மோர் லெஜெண்ட் ஏற்பாட்டில் 5வது தடவையாகவும் இடம்பெற்ற மீலாதுன் நபி சிறப்பு நிகழ்வுகள்

Rihmy Hakeem
By -
0

 

களுத்துறை சோனகத் தெரு மோர் லெஜெண்ட் ஐந்தாவது தடவையாக ஏற்பாடு செய்யும் மீலாதுன் நபி சிறப்பு நிகழ்வுகள் இன்றைய தினம் களுத்துறை சோனகத் தெருவில் மிகக் கோலாகலமாக இடம்பெற்றது. 

 

மனித வாழ்வுக்கு வழிகாட்ட வந்த உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஜனன தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மீலாதுன் நபி சிறப்பு நிகழ்வுகளில், துள்ளித் திரியும் பள்ளிப் பருவத்து மாணவ முத்துக்களின் கிராத், பேச்சு, ஹதீஸ், துஆ, இஸ்லாமிய கீதம், கஸீதா போன்ற நிகழ்ச்சிகள் ஊடாக பிஞ்சு உள்ளங்களில் இஸ்லாமிய அடிப்படையிலான நற்குணங்களை உருவாக்கி மாநபியின் மாண்புகளை வாழ்வில் வளம் பெறச் செய்ய வேண்டும் என்ற நன் நோக்கோடு மோர் லெஜெண்ட் ஏற்பாடு செய்த மற்றுமொரு சிறப்பு நிகழ்வாகும்.


இந்நிகழ்ச்சியில் 200-க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டதோடு அவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன.


எமது ஊருக்கு மட்டுமல்லாது முழு நாட்டுக்கும் முன்மாதிரியாக திகழும் மோர் லெஜன்ட் இன்னும் பல சமூக நற்பணிகள் ஊடாக இந்த மண்ணுக்கு மகத்தான பணி புரிய அனைவறாலும் அவர்கள் பாராட்டப்பட்டதோடு அவர்களின் பணிகளுக்காக பிரார்த்தனையும் புரியப்பட்டன என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் மோர் லெஜெண்ட் அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினருமான ஹிஷாம் சுஹைல் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)