ஐம்பதாண்டுகளுக்கும் மேலான ஒலிபரப்புப் பயணம்: திஹாரியில் கௌரவிக்கப்பட்ட சிரேஷ்ட கலைஞர் மஹ்தி ஹஸன் இப்ராஹிம்

Rihmy Hakeem
By -
0

 


தமிழ் பேசும் வானொலி நேயர்களிடையே பிரபலமான சிரேஷ்ட ஒலிபரப்பாளரும் கலைஞருமான மஹ்தி ஹஸன் இப்ராஹிம், ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக இலங்கை வானொலியின் முஸ்லிம் மற்றும் தமிழ்ச் சேவைகளுக்கு ஆற்றிய பங்களிப்புக்காக கௌரவிக்கப்பட்டார்.


1971ஆம் ஆண்டு வானொலி கலைப் பயணத்தை ஆரம்பித்த அவர், 1979ஆம் ஆண்டு இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவையில் பகுதி நேர அறிவிப்பாளராக இணைந்தார். தொடர்ந்து முஸ்லிம் சேவை, தேசிய சேவை, வர்த்தக சேவை உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் அறிவிப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், எழுத்தாளர், நடிகர் மற்றும் நகைச்சுவை நாடகாசிரியர் எனப் பல்வேறு துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தினார்.


குறிப்பாக, முஸ்லிம் சேவையின் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்கள் மூலம் நேயர்கள் மத்தியில் தனக்கென தனித்துவமான இடத்தைப் பெற்றுக்கொண்டார்.


திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் நடைபெற்ற “ரேடியோ மீலாத் 2026” நிகழ்வில், முஸ்லிம் சேவைக்கு அவர் ஆற்றிய நீண்டகால பங்களிப்பைப் பாராட்டி மஹ்தி ஹஸன் இப்ராஹிம் கௌரவிக்கப்பட்டார்.

Thanks - Thihariya News 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)