தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிக்கா மகா வித்தியாலய மாணவிகள் வரலாற்று சாதனை!

Rihmy Hakeem
By -
0

 



​2026 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் கஹடோவிட்ய முஸ்லிம் பாலிக்கா மகா வித்தியாலய மாணவிகள் வரலாற்று சிறப்புமிக்க சாதனையைப் படைத்துள்ளனர்.


​பரீட்சைக்குத் தோற்றிய 27 மாணவிகளில் 10 மாணவிகள் (37%) வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று புலமைப்பரிசில் பெறத் தகுதி பெற்றுள்ளனர். 


​பரீட்சை எழுதிய அனைத்து மாணவிகளுமே (100%) 70 புள்ளிக்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்குப் பெரும் பெருமை சேர்த்துள்ளனர்.


​இத்தகைய மகத்தான சாதனையைப் படைத்த மாணவிகளுக்கும், அவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களுக்கும் மற்றும் உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும் பாடசாலை நிர்வாகம், கிராம மக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)