படித்து முடித்தும் வேலையில்லையா? இலங்கையில் 43% பட்டதாரி இளைஞர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி நிலை! - Dr Ziad Aia

Rihmy Hakeem
By -
0

 




"கஷ்டப்பட்டுப் படிச்சு டிகிரி வாங்குனா நல்ல வேலை கிடைக்கும்" என்று நம் ஊரில் காலம் காலமாகச் சொல்லப்படும் ஒரு பேச்சு உண்டு. ஆனால், நிஜத்தில் நிலைமை அப்படியே தலைகீழாக இருக்கிறது என்பதை சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகள் அம்பலப்படுத்தியுள்ளன.


இலங்கையில் உயர் கல்வி முடித்த இளைஞர்களில் 43% பேருக்கு வேலைவாய்ப்பு இல்லை என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. 


அதாவது, உயர்கல்வி முடித்த பத்து இளைஞர்களில் நான்கு பேருக்கு மேல் வேலை கிடைக்காமல் தவித்து வருகிறார்கள்!


ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில்;

🎯 இலங்கை: 43% (மிகவும் மோசமான நிலை)

இந்தியா: 42%

பங்களாதேஷ்: 36%

🎯 உலக சராசரி: 19%

 சிங்கப்பூர்: 8%

 ஜப்பான்: 4%


சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளில் படித்து முடித்த இளைஞர்களுக்கு சுலபமாக வேலை கிடைக்கும் சூழல் உள்ள நிலையில், தெற்காசிய நாடுகளிலேயே படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்காத பட்டியலில் இலங்கை முதலிடத்தில் இருக்கிறது.


⁉️ இதற்கு என்னதான் காரணம் என IMF தெரிவித்தவை?


📛 தகுதிக்கும் வேலைக்கும் தொடர்பில்லை: பல்கலைக்கழகங்களில் நாம் படிக்கும் பாடத்திட்டங்களுக்கும், இன்றைய நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்களுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது (Skills Mismatch).


📛 பொருளாதார நெருக்கடி: ஏற்கனவே இலங்கை சந்தித்த கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் சூழலில், புதிய வேலைவாய்ப்புகள் உருவாவது குறைவாகவே உள்ளது.


📛 AI மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி: செயற்கை நுண்ணறிவு மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் வருகையால், வழக்கமான ஆரம்பகட்ட வேலைகள் குறையத் தொடங்கியுள்ளன.


🛑இதற்கு என்னதான் தீர்வு⁉️


பல்கலைக்கழகங்களும் தொழில்நுட்பக் கல்லூரிகளும் வெறும் பட்டங்களை மட்டும் வழங்காமல், தற்போதைய தொழிற்துறைக்கு என்ன தேவைப்படுகிறதோ அதற்கு ஏற்ப மாணவர்களின் திறன்களை (Reskilling) மேம்படுத்த வேண்டும் என்றும், கல்வி நிறுவனங்களுக்கும் தொழிற்துறைகளுக்கும் இடையே நேரடித் தொடர்பு இருக்க வேண்டும் என்றும் IMF சுட்டிக்காட்டியுள்ளது.


இருக்க; இலங்கைப் பல்கலைக்கழகங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான கலைப் (Arts & Humanities) பட்டதாரிகள் வெளியேறுவதற்கும், நாட்டில் நிலவும் உயர் வேலைவாய்ப்பின்மைக்கும் இடையே உள்ள பிணைப்பு மிகவும் வெளிப்படையானது.


ஒருபுறம் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக்களில் கறுப்பு அங்கி அணிந்து மகிழ்ச்சியுடன் பட்டம் வாங்கும் ஆயிரக்கணக்கான கலைப் பட்டதாரிகள்; மறுபுறம், "பட்டத்தைப் பெட்டியில் வைத்துவிட்டு வேலை தேடி அலைகிறோம்" என்ற கசப்பான உண்மை. இந்த முரண்பாட்டிற்கான காரணங்களை ஆழமானவை:


இலங்கையில் உயர்தரத்திற்குப் (A/L) பிறகு பல்கலைக்கழகத்திற்குத் தெரிவுசெய்யப்படும் மொத்த மாணவர்களில் 30% க்கும் அதிகமானோர் கலைப் பிரிவைச் சேர்ந்தவர்களே. இதற்கு முக்கிய காரணம்:


🤷‍♂️ 1. பாடசாலைக் கட்டமைப்பில் உள்ள 'அடிப்படைப் பிரச்சனை':


 நாட்டின் பல கிராமப்புறப் பாடசாலைகளில் கணிதம் மற்றும் விஞ்ஞானப் பிரிவுகளுக்கான போதிய ஆய்வுகூடங்களோ, ஆசிரியர்களோ இல்லை. இதனால் மாணவர்கள் விருப்பமுடன் அல்லாமல், வேறு வழியின்றி கலைப் பிரிவைத் தேர்ந்தெடுக்கத் தள்ளப்படுகிறார்கள்.


🤷‍♂️ பெண் மாணவர்களின் எண்ணிக்கை: கலைப் பிரிவில் சேரும் மாணவர்களில் பெரும்பாலானோர் பெண் பிள்ளைகள். உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி கலைப் பிரிவில் சித்தியடைபவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகம்.


🤷‍♂️ கலைப்பிரிவு மாணவர்களுக்கே 30% க்கு மேற்பட்ட ஆசனங்கள் பல்கலைக்கழகங்களில் ஒதுக்கப்படுவதால் பட்டதாரி கனவை நனவாக்க இதனூடாக வழி கிடைக்கிறது.


"பல்கலைக்கழகப் பட்டம் சரி... தனியார் துறை எதிர்பார்க்கும் 'திறன்' எங்கே"⁉️


பல்கலைக்கழகங்களில் கலைப் பிரிவில் கற்பிக்கப்படும் பாடங்கள் கோட்பாடுகள் (Theory) மற்றும் வரலாற்று ஆய்வுகளையே அதிகம் மையமாகக் கொண்டுள்ளன. ஆனால், இன்றைய வேலைவாய்ப்புச் சந்தை வேறு ஒன்றை எதிர்பார்க்கிறது:


🙆‍♂️ 1. ஆங்கில மொழியறிவு (English Proficiency): பெரும்பாலான கலைப் பட்டதாரிகள் தாய்மொழியிலேயே (சிங்களம்/தமிழ்) உயர்கல்வியைக் கற்கிறார்கள். ஆனால், தனியார் நிறுவனங்கள் சரளமான ஆங்கில உரையாடல் திறனை முதன்மையாக எதிர்பார்க்கின்றன.


🙆‍♂️ 2. தொழில்நுட்பத் திறன் (IT Skills): இன்றைய டிஜிட்டல் உலகில் 

Basic IT, 

தரவு பகுப்பாய்வு (Data Analysis)

 அல்லது மென்பொருள் (Software) சார்ந்த அறிவு இல்லாத பட்டம், வேலைவாய்ப்புச் சந்தையில் செல்லுபடியாவது கடினம்.


🙆‍♂️ 3. மென் திறன்கள் (Soft Skills): உரையாடல் திறன் (Communication skill), 

குழுவாக வேலை செய்யும் பண்பு (Teamwork), 

பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் திறன் (Problem Solving) போன்றவற்றில் உள்ள இடைவெளி.


🙆‍♂️ 4. 'அரசு வேலை' என்ற மாயை (The "Awaiting for Queue" Phenomenon)

கலைப் பட்டதாரிகளிடையே உள்ள மற்றொரு பெரிய பிரச்சனை மனநிலை.


 பட்டப்படிப்பை முடித்தவுடன், "எனக்கு ஓய்வூதியத்துடன் கூடிய பாதுகாப்பான அரசாங்க வேலைதான் வேண்டும்" என்று பல ஆண்டுகள் காத்திருக்கிறார்கள்.


🙆‍♂️ 5. கலைத்துறை மட்டுமன்றி ஏனைய துறை சார்ந்தோரும் தனியார் துறையில் வேலை வாய்ப்புகள் இருந்தாலும், அங்குள்ள பணிச்சுமை மற்றும் பணிப் பாதுகாப்பு (Job security) பற்றிய பயத்தினால் பல பட்டதாரிகள் தனியார் துறைக்குச் செல்லத் தயங்குகிறார்கள்.


 🙆‍♂️ 6. அரசு பணி நியமனங்களுக்காகப் பட்டதாரிகள் வீதியில் இறங்கிப் போராடுவதும், அரசும் தேர்தல் காலங்களில் ஆயிரக்கணக்கான பட்டதாரிகளுக்குத் தகுதிக்கேற்ற வேலையாக இல்லாவிட்டாலும் பட்டதாரி நியமனங்களை வழங்குவதும் ஒரு தொடர்கதையாகவே மாறிவிட்டது.


பல அரச நிறுவனங்களில் ICT Assistant & ICT Officer போன்ற வெற்றிடங்களுக்கு தேவையான ஆணிகள் இல்லாமல் திண்டாடுகின்றன. மறுபுறம் Development Officers என்ற பெயரில் ஆளணிகள் நிரம்பி வழிகின்றன.


🙆‍♂️ 7. சந்தைத் தேவைக்கும் பாடத்திட்டத்திற்கும் இடையே உள்ள 'இடைவெளி' (Skills Mismatch):


இலங்கையின் தொழிற்துறைக்கு (Industry) என்ன தேவை என்பதை அறிந்து, அதற்கு ஏற்ப பல்கலைக்கழகப் பாடத்திட்டங்கள் (Curriculum) புதுப்பிக்கப்படுவதில்லை.


 உதாரணத்திற்கு,

❤️சுற்றுலாத்துறை (Tourism), 

❤️ Digital Marketing,

❤️ Content Creation, 

❤️ சமூக ஊடக மேலாண்மை

 போன்ற துறைகளில் கலைப் பிரிவு மாணவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

இவற்றுக்கான பல்கலைக்கழக ஆசனங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்.


 ஆனால், பாரம்பரிய பாடத்திட்டங்கள் மாணவர்களை இந்த நவீனத் துறைகளுக்குத் தயார்படுத்துவதில்லை.


⁉️ இதற்கான தீர்வு என்ன?


✅ பாடத்திட்ட மறுசீரமைப்பு: கலைப் பிரிவில் படிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் பட்டப்படிப்போடு சேர்ந்து கட்டாய ஆங்கிலப் பயிற்சி, தகவல் தொழில்நுட்பக் கல்வி மற்றும் ஏதேனும் ஒரு தொழிற்கல்விப் பயிற்சி (Internship) வழங்கப்பட வேண்டும்.


✅ கிராமப்புறக் கல்வியை மேம்படுத்துதல்: பாடசாலை மட்டத்திலேயே STEM (Science, Technology, Engineering, Maths) கல்வியை கிராமப்புறங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும்.


✅ மனநிலை மாற்றம்: பட்டம் என்பது வெறும் அரசாங்க வேலைக்கான சான்றிதழ் அல்ல; அது சுய தொழில் தொடங்கவும், தனியார் துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் உதவும் ஒரு அறிவுத் தளமே என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.


✅ பல்கலைக்கழகங்களில் Theory ரீதியான கலைப்பட்ட படிப்புகளுக்கான இட ஒதுக்கீட்டை குறைத்து தொழிற்சந்தைக்கு தேவையான தொழில்கல்வியுடனான கலை பட்டதாரிகளையும் பயிற்சி நெறிகளையும் உருவாக்க வேண்டும். 






கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)