இந்திய பிரதி உயர்ஸ்தானிகருக்கும் சமய மற்றும் கலாசார விவகாரங்கள் பிரதி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

Rihmy Hakeem
By -
0


இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் மைத்ரேய் குல்கர்னி (Maitrey Kulkarni) அவர்களுக்கும், மத மற்றும் கலாசார விவகாரங்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் அவர்களுக்குமிடையிலான உத்தியோகபூர்வ சுமுக சந்திப்பொன்று அண்மையில் அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது.


உத்தியோகபூர்வ சுமுக சந்திப்பாக இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன. குறிப்பாக, இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க கலாசார பாரம்பரியங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விழுமியங்கள் குறித்து இதன்போது முக்கியமாக கலந்துரையாடப்பட்டது.


இதற்கு மேலதிகமாக, இலங்கையின் தற்போதைய அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் அது தொடர்பான எதிர்கால திட்டங்கள் குறித்தும் இச்சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. இரு நாடுகளுக்கும் முக்கியமான இன்னும் பல விடயங்கள் மற்றும் பல்வேறு துறைகள் குறித்தும் இதன்போது வெற்றிகரமாக கலந்துரையாடப்பட்டது.


இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையே நிலவும் நீண்டகால மத மற்றும் கலாசார பிணைப்பை மேலும் ஊக்குவித்து, பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் இச்சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.


ஊடகப் பிரிவு

மத மற்றும் கலாசார விவகாரங்கள் பிரதி அமைச்சர் அலுவலகம்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)