அத்தனகலு ஓயா ஆற்றுப் பள்ளத்தாக்கின் மேல் மற்றும் மத்திய நீரேந்து பகுதிகளில் பெய்த குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி மற்றும் பஸ்நாகொட நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட முந்தைய எச்சரிக்கையானது, 2026 நவம்பர் 12 ஆம் திகதி இரவு 10.00 மணி வரை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது 'அம்பர்' (Amber) வண்ண எச்சரிக்கையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலப்பகுதியில் திவுலப்பிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவங்கொடை, ஜா-எல, கட்டான மற்றும் வத்தளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட அத்தனகலு ஓயா மற்றும் உருவல் ஓயா ஆற்றுப் பள்ளத்தாக்குகளின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுகிறது.
இந்நிலைமை தொடர்பில் குறித்த பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அப்பிரதேசங்களினூடாகச் செல்லும் வீதிகளிலும், குறிப்பாக உள்வீதிகளிலும் பயணிக்கும் வாகன சாரதிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும். அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள் இது தொடர்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


