கொழும்பு மாநகர சபையின் 62 அமைய ஊழியர்களுக்கு பெப்ரவரி 01 ஆந் திகதியில் இருந்து நிரந்தர நியமனம்.மேல் மாகாண ஆளுநர் எம். அசாத் எஸ்.சாலி வழங்கிய உத்தரவின் பேரில், கொழும்பு மாநகர சபையில் (சி.எம்.சி) இல் பணிபுரியும் 62  அமைய  ஊழியர்கள் பெப்ரவரி 01 ஆந் திகதியிலிருந்து நிரந்தரமாக்கப்படவுள்ளனர்.

கொழும்பு மாநகர சபையில் வடிகாலமைப்பு பிரிவுக்கு இணைக்கப்பட்டிருந்த இந்த ஊழியர்கள் நீண்டகாலமாக  அமைய அடிப்படையில் பணிபுரிந்து வருவதாக ஆளுநர் தெரிவித்தார். "அவர்களின் தொடர்ச்சியான மற்றும் திறமையான சேவைகளை அங்கீகரிக்கும் பொருட்டு அடுத்த மாதம் முதல் அவர்களின் நிரந்தரத்தை உறுதிப்படுத்தியுள்ளேன்," என்று  ஆளுநர் கூறியுள்ளார்.


Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here