கஹட்டோவிட்ட மண்ணின் மைந்தனாம் அல் ஹாஜ் எம்.எம் மொஹம்மத் அவர்கள் இலங்கை சனநாயக குடியரசின் 9ஆவது தேர்தல் ஆணையாளராக பதவியுயர்வு பெற்றதை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை 9.30 முதல் கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் பல்வேறு விசேட அதிதிகள் உரை நிகழ்த்தியதுடன் மற்றும் பல உள்ளூர் வெளியூர் விசேட அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.

குறிப்பாக நீதியரசர் ஸலீம் மர்சூக் மற்றும் ஜாமிஆ நளீமியா கலாபீடத்தில் பயின்று உயர் பதவிகளில் இருக்கின்ற முக்கிய அதிதிகளின்  பாராட்டு உரையும் இடம் பெற்றதோடு .முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் கௌரவ  என்.எம் அமீன் அவர்களின் உரையும் ஊர் சார்பில் சொல்லின் செல்வன் முன்னால் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் பணிப்பாளர் எம்.இஸட் அஹமத் முனவ்வர் ஹாஜியார் அவர்களின் வாழ்த்துரையும் இடம்பெற்றது.
இடைக்கிடையே கஹட்டோவிட்ட பாதிபிய்யாச் சங்கத்தினால் வழங்கப்பட்ட நினைவுச்சின்னம்,கஹட்டோவிட்ட மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல் நிர்வாகத்தால் வழங்கப்பட்ட நினைவுச்சின்னம்,கஹட்டோவிட்ட முஹிய்யத்தீன் ஜும்மாப்பள்ளிவாசல் நிர்வாகத்தால் வழங்கப்பட்ட நினைவுச்சின்னம்,கஹட்டோவிட்ட அல் முஸ்தபவிய்யா அஹதிய்யாப் பாடசாலை சார்பில் வழங்கப்பட்ட நினைவுச்சின்னம்,கஹட்டோவிட்ட ஜே.எப் அமைப்பினரால் வழங்கப்பட்ட நினைவுச்சின்னம்,கஹட்டோவிட்ட நபவிய்யா தக்கியாவினால் வழங்கப்பட்ட நினைவுச்சின்னம்,கஹட்டோவிட்ட sedo அமைப்பினர் வழங்கிய நினைவு பரிசு ,கஹட்டோவிட்ட அல் பத்றியாவில் பயின்ற அவரது சக மாணாக்கர் 1975 வகுப்பினரின் நினைவுச்சின்னம்,கஹட்டோவிட்ட கமியுனிட்டி போரத்தின் நினைவுச்சின்னம் போன்ற பல்வேறு அமைப்புக்கள் பள்ளிவாசல்கள் தரீக்காக்களினதும் சார்பில் தேர்தல் ஆணையாளர் நாயகம் எம் எம் மொஹம்மத் அவர்களைப்பாராட்டி கௌரவித்தமை விசேட அம்சமாகும்.

பெருந்திரளான உள்ளூர் வெளியூர் அதிதிகள் பிரமுகர்கள் ஊர்ப்பொதுமக்கள் என பல்வேறு பட்ட சகோதரர்களும் கலந்து அரங்கை நிரப்பமாக்கியிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.நிகழ்வுகளின் போதான படங்களை இங்கே காணலாம்.

















படப்பிடிப்பும் செய்தித் தொகுப்பும்
எம்.ஆர்.லுதுபுள்ளாஹ்
கஹட்டோவிட்ட.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.