பருந்தாகிப் போன ஊர் குருவி!

பருந்தாகிப் போன ஊர் குருவி!

அமீனத்து ஈந்தளித்த
அமானத்து
நம் யாவருக்கும் இறை அளித்த
நிஃமத்து...
நம் தேசத்துக்கே ஒரு பெரும்
சொத்து..
அவர்தான் நம் ஆணையாளர்
முஹம்மது...

என் தந்தையிடம்
அகரம் பயின்றாய்
இன்று நீ
சிகரத்தையே தொட்டு நிற்கிறாய்!

படித்து உயர்பதவிகள் பெற
ஏழ்ம்மை தடைக் கல் என்ற
பிழையான மனப் பதிவை
துடைத்தெறிந்த தலைமகன் நீ!

மாணிக்க தேசத்து
மன்னவன்  நழீமின் பட்டறையில் பட்டைதீட்டப்பட்ட நீ இன்று,
நம் தேசமாம்
மாணிக்கத் துவீபத்துக்கே
மாணிக்கமெனச்
சுடர்விட்டுப் பிரகாசிக்கிறாய்!

ஊர்க் குருவியும்
பருந்தாகலாம் என்பதை
சாதித்துக் காட்டிய
சாதனை நாயகனே...
உன் சாகசங்களை மெச்சுவதற்கு
என்னிடம் வார்த்தை இல்லை!

வாழ்க வளமுடன் ஸேர்!

(ஆசிரியர் பூஸரி ஸாலிஹ்)
Share:

No comments:

Post a Comment