அத்தனகல்ல கல்வி கோட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு இடையிலான 16 வயதின் கீழ் கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் உடுகொட அறபா மகா வித்தியாலய அணி வெற்றி பெற்றது.

கஹட்டோவிட்ட அல் பத்ரியா அணியை 3 - 0 என்ற அடிப்படையில் வீழ்த்தியே இவ் வெற்றியை பெற்றுக்கொண்டது.

இதே வேளை 20 வயதின் கீழ் போட்டித் தொடரில் கஹட்டோவிட்ட பத்ரியாவை 2 - 1 என்ற அடிப்படையில் வீழ்த்தி திஹாரி அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியி அணி சம்பியனாகியதுடன் 18 வயதின் கீழ் தொடரில் கஹட்டோவிட்ட பத்ரியா அணி திஹாரி அல் அஸ்ஹரை 1 - 0 என்ற அடிப்படையில் வீழ்த்தி சம்பியனானமை  குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.