ஓமான் வாகன விபத்தில் 4 இலங்கை முஸ்லிம்கள் பலி!


ஓமானில் இடம்பெற்ற வாகன விபத்தில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த மூவரும், பொத்துவிலைச் சேர்ந்த சிறுவன் ஒருவனும் உயிரிழந்ததுடன் இருவர் கடுங்காயங்களுக்கு உள்ளாகினர்.

ஓமானின் ம​லைப்பாங்கான அல் ஜபல் அல் அஹ்தார் என்ற பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை (16) மாலை இவ்விபத்து இடம்பெற்றது.

இதில் தாயுட்பட, அவரது இரண்டு பெண் பிள்ளைகள், உயிரிழந்ததுடன், கணவரும், மகனும் கடுங்காயங்களுக்கு உள்ளாகினர். இவர்களுடன் சென்ற பொத்துவில் சிறுவனும் ஸ்தலத்தில் உயிரிழந்தார்.

அக்கரைப்பற்று 01அல்பாத்திமியா வீதியைச் சேர்ந்த பிரபல கணக்காளரான அஹமட் சக்கி தனது குடும்பாத்தாருடன் பயணித்த உயர்ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால் இவ்விபத்து ஏற்பட்டது. இதில் சக்கியின் மனைவியான முஹம்மது அபூபக்கர் காமிலா (40), புதல்விகளான நவால் (14), ஹபாப் (09) ஆகியோரும் உடன் சென்ற பொத்துவில் சிறுவன் பாதிக் (06) உட்பட நால்வர் உயிரிழந்தனர். காயமடைந்த சக்கியும் அவரது மகனான அமூத் ஆகியோர் ஓமான் வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தோரின் ஜனாஸாக்களை ஓமானில் நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் மேற்கொண்டுள்ளனர்.

சிகிச்சை பெற்று வரும் தந்தை, மகனின் நிலைகள் தேறிவருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பட்டயக் கணக்காளரான அஹமட் சக்கி ஓமானில் சுமார் மூன்று வருடங்களாகப் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here