(அஷ்ரப் ஏ சமத்)


71வது தேசிய தின விழாவும் மற்றும் 250 மரக்கன்றுகள் நடும் வைபவம் இன்று பெப் 4 கல்கிசை வட்டரப்பொல வீதியில் உள்ள  ஜூம்ஆப் பள்ளிவாசலிலின் நிருவாகத் சபைத் தலைவா் மொஹமட் பைசா் தலைமையில் நடைபெற்றதுடன் தேசியக் கொடியையும் அவா் உயா்த்திவைத்தாா்.
இந் நிகழ்வுக்கு ரத்மலானை கல்கிசைப் பிரதேசங்களின் பிரதான பௌத்த விகாரைகளின் பிராதான தேரா்கள் மற்றும் கல்கிசை ஹிந்து கோவிலின் குருக்கள் திரு. சங்கரும் கலந்து  சிறப்பித்தனா். அத்துடன் சிங்கள மொழி மூலம்  அஷ்ஷேக்  மாகீா் ரம்டீன்  சுதந்திரத்தினை பெறுவதற்காக முஸ்லிம் தலைவா்களான  கலாநிதி டி.பி.ஜாயா, பதியுத்தீன் மஹ்முத், டொக்டா் கலீல் ஆற்றிய பங்குகள் பற்றியும் உரையாற்றினாா்.   அத்துடன் பள்ளிவாசலில் முன்றலில் சகல மதத் தலைவா்களும் இணைந்து 7 மரக்கன்றுகளை  நாட்டினாா்கள். அத்துடன் தெஹிவளை துாய்மை எதிா்காலத்திற்காக மரம் நடுவோம் எனும் திட்டத்தின் கீழ் அதனை தலைவா் திரு அவ்ப் 250 மரக்கன்றுகளையும்  பகிா்ந்தளித்தாா். 










கருத்துரையிடுக

Blogger இயக்குவது.