கஹட்டோவிட்ட பிராந்தியத்தில் உள்ள கிரிக்கெட் வீரர்களை உள்ளடக்கி, ஒவ்வொரு வருடமும் விமர்சையாக நடைபெற்று வரும் கஹட்டோவிட்ட ப்ரீமியர் லீக் (KPL) சுற்றுப் போட்டி தொடர்ந்து 8 வது தடவையாக கஹட்டோவிட்ட பொது மைதானத்தில் நடைபெற்றது. 

சென்ற 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் நடைபெற்ற இச் சுற்றுப் போட்டியில் 8 அணிகள் மோதின. இறுதிப் போட்டியில் Main Street United மற்றும் Kurawalana Eagles அணிகள் நுழைந்தன.

முதலில் துடுப்பெடுத்தாடிய  Kurawalana Eagles அணிகள் நிர்ணயிக்கப்பட்ட 5 ஓவர்களில் 81 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய Main Street United United அணி 5 ஓவர்களில் 64 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இச் சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வுகள் கஹட்டோவிட்ட இமாம் ஷாபி நிறுவனத்தில் (02) விமர்சையாக ஆரம்பிக்கப்பட்டது.














(கஹட்டோவிட்ட ரிஹ்மி)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.