திஹாரியில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வு : இராஜாங்க அமைச்சர் பைஸல் காசிம் பிரதம அதிதி


இலங்கையின் 71 வது சுதந்திர தின நிகழ்வு மிக விமர்சையாக திஹாரிய அல்- மஸ்ஜிதுல் ரவ்லா பெரிய பள்ளியின் முன்னால் உள்ள  திடலில் நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு திஹாரிய மற்றும் அதனை அண்மித்த பகுதிகளைச் சேர்ந்த மத குருமார்கள் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், சுகாதார இராஜாங்க அமைச்சருமாகிய கௌரவ பைசல் காசிம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டதோடு, திஹாரியில்  பண்டாரநாயக்க வீதியில் அமைந்துள்ள மருந்தகத்திற்கு ரூபா 250 இலட்சம் பணம் ஒதுக்கி கட்டிடம் ஒன்றை கட்டித்தருவதாகவும் வாக்களித்தள்ளார்.

இந்த நிகழ்வுக்கு  மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி(f) ரஹீம் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.

 இந்த நிகழ்வை திஹாரிய ஜம்மியதுல் உலமா மற்றும் திஹாரிய அனைத்து பள்ளிகளின் சங்கம் ஏற்பாடு செய்து இருந்தன...
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here