டுபாய் நாட்டில் கைது செய்யப்பட்ட பிரபல பாதாள உலக கும்பல் தலைவன் மாகந்துர மதூஷ் உள்ளிட்ட குழுவினரை நாட்டுக்கு கொண்டு வருவதற்காக இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸ் விஷடே அதிரடிப் படையின் கட்டளைத் தளபதி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எம். ஆர். லத்தீப் கூறியுள்ளார். 

இருநாட்டு அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் இந்நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார். 

இலங்கை வௌிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு தலையிட்டு அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் என்று சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எம். ஆர். லத்தீப் கூறியுள்ளார். 

பிரபல பாதாள உலக கும்பல் தலைவன் மாகந்துர மதூஷ் உள்ளிட்ட குழுவினர் டுபாய் மற்றும் இலங்கை பொலிஸார் ஒன்றிணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் நேற்று கைது செய்யப்பட்டனர். 

இதேவேளை கைது செய்யப்பட்ட குழுவில் இராஜதந்திர கடவுச்சீட்டு வைத்திருக்கும் நபர் ஒருவரும் உள்ளடங்குவதாக அந்த நாட்டு ஊடகமான ´கலீஜ் டைம்ஸ்´ செய்தி வௌியிட்டுள்ளது. 

இந்த கைது நடவடிக்கையின் போது பாரியளவில் ஹெரோயின், கொக்கைன் போன்ற போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக அந்த ஊடகச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.