நாட்டிலுள்ள நடுத்தர மக்களுக்கு போசாக்கு மிக்க மீன்களை குறைந்த விலையில்வழங்குவதற்காக பிரதான நகரங்களை மையப்படுத்தி ஆரம்பிப்பதற்கும், தற்போது இயங்கி வரும் இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபன விற்பனை நிலையங்களுக்கு அவை இயங்கி வரும் சில உள்ளுராட்சி மன்றங்களினால் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சி தெரிவித்தார்.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அபிவிருத்தி அமைச்சுடன் தொடர்புடைய நிறுவனங்களுடனான சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனம், இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனம், கடற்றொழில் திணைக்களம், சீனோர் மன்றம், NAQDA, NARA போன்ற நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர்கள், திணைக்களப் பணிப்பாளர்கள் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
மக்களுக்கு நியாய விலையில் மீன்களை வழங்கும் பொறுப்பு கடற்றொழில் திணைக்களத்திற்கு இருப்பதாக இராஜாங்க அமைச்சர் அங்கு தெரிவித்தார். அதற்காக அனைத்து நகரங்களிலும் மீன் விற்பனை நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் சில உள்ளுராட்சி மன்றங்களால் மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையங்களுக்கு ஏற்படுத்தப்படும் பிரச்சினைகள் சம்பந்தமாக, அதனை தவிர்ப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் நடவடிக்கைகளை எடுக்க முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தார். மீன் விற்பனையில் தனி நபர்களின் இலாபத்திற்காக மோசமான அரசியல்வாதிகளின் சுய நலமான செயற்பாடுகளே இதற்குக் காரணமாகும்.
உள்ளுராட்சி மன்றங்கள் மக்களுக்கு சேவை செய்வதற்காகவே உள்ளதென்றால் ஏன் நியாய விலையில் விற்பனை செய்யும் நிலையங்களுக்கு இடையூறு விளைவிக்க வேண்டும்? இது சம்பந்தமாக பொறுப்பான அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் பேசுவேன். கடற்றொழில் திணைக்களத்திற்கு வருமானம் தரும் சகல வழிகளும் அடைக்கப்பட்டு அவை தனியாருக்கு வழங்கப்பட்டு வரும் மாபியா வேலை நடைபெறுவதாக சந்திப்பில் கூறப்பட்டது.
புதிதாக வருமானம் தரும் உபாயம் கண்டறியப்பட வேண்டும். பண்டிகைக்கு முன்னர் மக்களுக்கு நலன்கள் கிடைக்க வேண்டும். நட்டத்தில் இயங்கும் கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் நட்டத்தை குறைக்க மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றும் அங்கு தெரிவிக்கப்பட்டது.
இதற்கு முன்னர் இவ்வாறு நட்டம் ஏற்படுவதற்குக் காரணம் மற்றும் காரணமானவர்கள் சம்பந்தப்பட்ட அறிக்கை ஒன்றை தயாரித்து வழங்குமாறு கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்குக் கூறப்பட்டது.
மாவட்ட மட்டத்தில் நட்டத்தில் இயங்கும் பிரதேச விற்பனை நிலையம் மற்றும் விலைக்கு வாங்கும் அலுவலகம் என்பவை பற்றி விமர்சித்த இராஜாங்க அமைச்சர், ஒரு மாதத்தில் அவற்றின் நட்டத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தார்.



ரிஹ்மி ஹக்கீம்,
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.