ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கஹட்டோவிட்ட மத்திய குழுவின் பொருளாளர் ரம்ஸான் மாஸ்டர் மற்றும் அத்தனகல்ல பிரதேச சபை வேட்பாளர் ரிஷான் ஆகியோரின் வேண்டுகோளின் படி, மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் அவர்களது ரூபா 16 இலட்சம் நிதியொதுக்கீட்டில் புனரமைக்கப்பட்ட ஓகொடபொல மத்ரஸதுஸ் ஸலாம் குர்ஆன் மத்ரஸாவுக்கு முன்னால் செல்லும் வீதி இன்று (14) காலை 10.00 மணியளவில் கௌரவ ஷாபி ரஹீம் அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ளது.
அத்துடன் அதே நேரத்தில், அவரது நிதியொதுக்கீட்டில் மூக்குக் கண்ணாடிகளை வழங்குவதற்கான கண் பரிசோதனை முகாம் ஒன்றும் மத்ரஸதுஸ் ஸலாம் குர்ஆன் மத்ரஸாவில் நடைபெறவுள்ளதாகவும் தேவையான ஆண்கள், பெண்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறும் ரம்ஸான் மாஸ்டர் கோரிக்கை விடுத்தார்.