அடையாள அட்டை தொடர்பில் பாடசாலைகளுக்கு சுற்று நிருபம்( மினுவாங்கொடை நிருபர் )

   பரீட்சைக்குத்  தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் பணிகள், தற்போது  ஆரம்பமாகியுள்ளதாக,  ஆட்பதிவுத்  திணைக்களம் தெரிவித்துள்ளது. 
   இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னதாக தேசிய அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பங்கள், இத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படல்  வேண்டும் என்று கோரும் விசேட சுற்று நிருபம் ஒன்று, பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்,  தகவல் தொழில் நுட்ப மற்றும் இயக்கச்  செயற்பாட்டு ஆணையாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். 
இதனடிப்படையில், 3 இலட்சத்து 50 ஆயிரம் மாணவர்களுக்கு இந்த அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்றும்,  திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்ப மற்றும் இயக்க செயற்பாட்டு ஆணையாளர்  மேலும் குறிப்பிட்டுள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here