துப்பாக்கிச் சூடு நடாத்திய தீவிரவாதி முஸ்லிமாயின்...

Rihmy Hakeem
By -
0


நியூஸிலாந்தில் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூடு பதைபதைக்க வைக்கிறது. துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதி முஸ்லிமாக இருந்து துப்பாக்கிச் சூடு நடந்த இடம் ஷாப்பிங் மால் ஆகவோ தேவாலயமாகவோ இருந்து தொலைத்தால் அவ்வளவுதான்...

'லங்கா சிரி' போன்ற மறை கழண்ட பைத்தியத்தில் இருந்து தினமலம் வரை வித விதமான தலையங்கத்தில் வாந்திகள் படு கோலாகலமாய் இருந்து இருக்கும்..

' நியூஸிலாந்து என்ற அமைதிப் பூங்காவிலும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் வெறித்தனம் செய்கிறார்கள்.நான் போய் செட்டிலாக இருந்தேன்." என்ற தொனியில் யாராவது ஒருவர் பதிவு எழுதி இருப்பார்.ஆச்சா....சரி..." இஸ்லாம் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை ப்ரோ,.இதற்கும் உள்ளூர் அப்பாவி முஸ்லிம்களான எமக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. எங்களை விட்டுவிடுங்கள்." என்று நம்ம ஆட்கள் பழைய கோபி கடை ரேடியோவின் கீறல் விழுந்த உப்புச்சப்பற்ற பல்லவியை ஆரம்பிப்பார்கள்.ஆனால் எதுவும் யார் காதிலும் விழாது.நியூஸிலாந்து கொடியைப் ப்ரொபைல் பிக்சராக்கி அதில் " பயங்கரவாதிற்கு எதிரான போர் " என்று ஜோர்ஜ் புஷ் ரேஞ்சுக்கு ஆரம்பித்து வைப்பார்கள்.இனி என்ன ஜெக ஜோதியில் கலந்து ஐக்கியமாகி நாமும் நிரூபிக்க வேண்டாமா ? நமது ஒரு க்ரூப்பும் அதையே தொடரும்.

பின்னர் ப்ரொபைல் பிக்சர் மாற்றிய க்ரூப்புக்கு எதிராக உள்குத்துப் பதிவு வரும்..'' சிரியா  எரிந்து போய்விட்டது.பலஸ்தீனம் பாழாகிவிட்டது.ஆப்கானில் ஜுப்பாவைத் தவிர எடுக்க ஒன்றும் இல்லை" என்று நிலமை இருக்க நியூஸிலாந்துக்காக ஒப்பாரியா என்று கிளம்புவார்கள்...இந்த சந்தடிசாக்கில் வாழ்க்கையில் நியூஸிலாந்தை மேப்பில் கூடப் பார்த்து இராத போராளி நாலு ஃபேஸ்புக் பதிவுகளைப் பார்த்துவிட்டு எழுத்துப் பிழைகளுடன் ஏழு முழம் வேஷ்டி நீளத்திற்குக் கட்டுரை எழுதுவார்.....ஜும்மா பிரசங்கத்தில் யாராவது கண்டிப்பார்கள்.அதை வைத்து வாட்ஸப்பில் விவாதம் நடக்கும்.

ஆளாளுக்கு சொந்தக் கோபத்தை எல்லாம் கொட்டித் தீர்க்க தொடங்குவார்கள்."you were tagged on, mentioned on, also commnted on " என்று நோட்டிபிகேஷன் ஊர்வலம் ஆரம்பித்துவிடும்.ஆக மொத்தத்தில் பைத்தியகார ஆஸ்பத்திரியில் உள்ளவர்களை லாரியில் போட்டுக் கொண்டு வந்து காலி வீதியில் விட்டுவிட்டுப் போன மாதிரி இருக்கும்...

அப்பாடா நல்ல வேளை தப்பினோம்...

(Zafar Ahmed)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)