முஸ்லிம் பாடசாலைகளுக்கு 11ஆம் திகதி விடுமுறை


முதலாம் தவணை விடுமுறைக்காக முஸ்லிம் பாடசாலைகள் எதிர்வரும் 11ஆம் திகதி மூடப்பட்டு மீண்டும் இம்மாதம் 17ஆம் திகதி திறக்கப்படுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.  

இம்மாதம் 15ஆம் திகதியை அரசாங்கம் பொதுவிடுமுறை தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. இந்நிலையில், முஸ்லிம் பாடசாலைகளுக்கும் இம் மாதம் 17, 18ஆம் திகதிகளை விடுமுறை தினமாக கணித்து இப்பாடசாலைகளையும் இம் மாதம் 22ஆம் திகதி மீளவும் திறப்பது மிகவும் பொருத்தமானதென முஸ்லிம் பாடசாலை அதிபர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதற்காக இரண்டு நாட்கள் பதில் பாடசாலை நடாத்தப்படலாம்

இதேவேளை, முதலாம் தவணை விடுமுறைக்காக தமிழ், சிங்கள பாடசாலைகள் கடந்த 05 ஆம் திகதி மூடப்பட்டதோடு மீண்டும் இரண்டாம் தவணை கல்வி செயற்பாடுகளுக்காக எதிர்வரும் 22 ஆம் திகதி திறக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here