இஸ்லாமிய பெண்கள் அணிகின்ற உடம்பு முழுவதும் மறைகின்ற புர்கா ஆடையினை தடை செய்வதற்கு அமைச்சர்கள் சிலர் யோசனையொன்றை முன்வைத்த போது, அந்த யோசனைக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார் என ஊடகங்களில் வெளியான செய்திகள் முழுமையாக உண்மைக்கு புறம்பானது என பிரதமர் அலுவலகம் அறிவித்துக் கொள்கின்றது.

மேற்கூறப்பட்ட செய்தியின் ஊடாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் புர்காவினை தடை செய்வதற்கான சட்டத்தினை இயற்றுவதற்கு எதிராக செயற்படுகின்றார் எனும் மாயையினை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்யப்பட்டுள்ளது. 

உண்மையில், புர்கா பயன்பாட்டினை நிறுத்துவதற்காக முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையினால் யோசனையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளமையினால், நீதியமைச்சர் அந்த சபையுடன் இணைந்து கலந்துரையாடி சட்ட மூலம் ஒன்றை தயாரிக்குமாறே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அதன் போது தெரிவித்துள்ளார்.  



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.