குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரு வாரங்களில் இழப்பீடு

உயிர்த்தெழுந்த ஞாயிறு குண்டுத் தாக்குதலினால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் காயமடைந்த அனைவருக்கும் எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியில் இழப்பீடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

நிதியமைச்சின் கீழ் இயங்கும் இழப்பீடுகளை வழங்குவதற்கான அலுவலகத்தின் பணிப்பாளர் ஆனந்த விஜேபால தகவல் தெரிவிக்கையில், இதுவரை நஷ்டஈடாக 50 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் வெடிப்புச் சம்பவத்தினால் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்காக இரண்டு கோடியே 50 லட்சம் ரூபா செலவிடப்பட்டிருப்பதாக தெரிவித்தார். 

உயிரிழந்த 27 பேர் மற்றும் காயமடைந்த 35 பேருக்காக இந்த இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்காக நஷ்டஈடாக இரண்டு கோடியே 16 லட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. 

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் உயிரிழந்தவர்ளுக்கான இழப்பீடு எதிர்வரும் திங்கட்கிழமை வழங்கப்படவிருப்பதாக பணிப்பாளர் பணிப்பாளர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார். 

(அரசாங்க தகவல் திணைக்களம்)
Share:

No comments:

Post a Comment