அண்மையில் மினுவாங்கொட, குருநாகல் பகுதிகளில் நடைபெற்ற வன்முறைகளால் பாதிக்கப்பட்ட 21 பள்ளிவாயள்களுக்கான நஷ்டஈடுகளை ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவரும் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச இன்று வழங்கிவைத்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர் கௌரவ ஹலீம் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ பௌசி, கௌரவ முஜிபுர் ரஹ்மான், கௌரவ ஹர்ஷன ராஜகருணா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.