திருகோணமலை மாவட்டத்தில் அண்மைக்காலமாக இடம்பெறும்  கன்னியா வெந்நீரூற்றும் அதனைத்தொடர்ந்த கோயில் பிரச்சினைகளையும், யாவரும் அறிந்துள்ளோம், ஆனால் அந்த பிரச்சினையில் தமிழ் சகோதரர சமூகம்  மட்டுமல்ல,   இதில் முஸ்லிம்களுக்கும் தொடர்புண்டு, இதில் பாதிக்கப்படப்போவது முஸ்லிம் இருப்பும், வரலாறும் என்பதும் தவிர்க்க முடியாத உண்மை

#40 #முழ_சியாறம்,

கன்னியாவில் மிக நீண்டகாலமாக முஸ்லிம்களால் கண்ணியப்படுத்தப்பட்ட ஒரு சியாறம் உண்டு இது முஸ்லிம்களுக்கே தனித்துவமான 40 முழ மரபுக்குட்பட்டது, ஆனாலும் இது இராவணனின் தாயின் கல்லறை என இந்து மரபினர் நம்புகின்றனர் ஆனால் முஸ்லிம்களின் வாய்வழி, சமயத் தொன்மையில் இது முஸ்லிம்பண்பாட்டு மரபுக்குரியது என்ற ஆதாரம் உண்டு,

#சிறுபான்மை_ஒற்றுமை,

அண்மைக்காலமாக இடம்பெறும் சிங்கள தொல்பொருள் ஆக்கிரமிப்பாளர்களின் அடக்குமுறையில்  சிறுபான்மையினர் என்ற வகையில் பல இடங்களை இரு சமூகமும் இழந்து வருகின்றோம், அந்த வகையில், புராதனம், குறித்த தெளிவும், புரிந்துணர்வும், இரு சமூகங்களுக்கிடையே மிகவும்  அவசியமாகின்றது. அதற்கு நாங்கள்  அவசியம் தயாராக இருக்க  வேண்டும்,

#முஸ்லிம்_பிரச்சினைகள்

முஸ்லீம் பூர்வீக இருப்புக்கான ஆதாரங்களாக இலங்கையில் மீஷான்கள், பள்ளிவாசல்கள், மரபுசார் நிகழ்வுகள் என பல விடயங்கள் உள்ளன ஆனாலும் சியாறங்கள் என்பது இவற்றின் பௌதீக நில அடையாளமாக இன்றும் உள்ளது, இதனைப் பாதுகாப்பதில் ,பல சிக்கல்கள் உள்ளன, அந்தவகையில் தொல்பொருள் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பும் அதுசார் சட்டங்களுடன், ஏனைய இன ஆக்கிரமிப்பாளர்களின் சிக்கலையும் முஸ்லிம் வரலாறும், சமூகமும்  எதிர்கொள்கின்றது, இது நாட்டின் பல இடங்களில்  இது பிரச்சினையாக உள்ளது,
உதாரணமாக அம்பாரை மாவட்ட மாயக்கல்லி, வட்டமடு, தீகவாபி.

#அவசரத்தீர்வுகள்,

அண்மையில்  ஜனாதிபதியைச் சந்தித்த  அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் தொல்லியல் திணைக்களத்தின் ஆலோசனை சபையில் உள்ள 32 பேரும் சிங்கள புத்திஜீவிகள் எனவும் அதில் தமிழர்கள் 5 பேராவது இணைக்கப்பட வேண்டும்  என ஜனாதிபதியிடம்  அனுமதி பெற்று அதற்கான முயற்சியை ஆரம்பித்துள்ளார்,

 அதில் தமிழ் பேசுவோர் என்ற அடிப்படையில் குறைந்தது 2 முஸ்லிம் புத்திஜீவிகளாவது  இணக்கப்படுவார்களாயின் ,அமைச்சர் மனோவின்  இன நல்லுறவை பாராட்ட முடியும், அமைச்சர் செய்வாரா???

இன்றேல் முஸ்லிம் அரசியல்வாதிகள் அவசரமாக செயற்பட்டு எமது சமூகத்தைச் சேர்ந்த வரலாற்று, தொல்லியல்  ஆய்வில் நிபுணத்துவமிக்க புத்திஜீவிகளை இணைப்பதற்கான அவசர செயற்பாட்டில் ஈடுபட வேண்டும், அதற்கான அழுத்தத்தை ஒரு உணர்வுள்ள சமூகம் என்ற வகையில் முஸ்லிம்சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் மிக அவசரமாக மேற்கொள்ள முன்வர வேண்டும், ஏனெனில் குறித்த குழுவில் நமது பிரதிநிதிகளும் இணைவதன் மூலமே, எமது எதிர்கால பல பிரச்சினைகளை இலகுவாகத் தீர்க்க முடியும்,

எனவேதான் இந்த செய்தி உரிய இடத்தை அடையும்வரை முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுவோம்.

MUFIZAL ABOOBUCKER
DEPARTMENT OF PHILOSOPHY
UNIVERSITY OF PERADENIYA

19:07:2019







,

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.