முஸ்லிம்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே ஐக்கிய மக்கள் காங்கிரஸ் ஜனாதிபதி தேர்தலில் தீர்மானம் எடுக்கும்

Rihmy Hakeem
By -
0

முஸ்லிம்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டே ஜனாதிபதித் தேர்தலில் UPC தீர்மானம் மேற்கொள்ளப்படும்.

 இந்நாட்டிலே ஆயிரம் வருடங்களுக்கு மேலாய் ஏனைய சமய சகோதர இன மக்களுடன் ஒற்றுமையாகவும் நாட்டின் இறைமையை பாதுகாத்தும் வாழ்ந்து வருகின்ற முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டே இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் காங்கிரஸ் (UPC) தீர்மானம் மேற்கொள்ளப்படும் என UPC யின் பொதுச் செயலாளரும் கம்பஹா மாவட்ட சமாதான நீதவானும்  முன்னாள் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினருமான கமால் அப்துல் நாஸர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் நாட்டிலே முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத குழுக்களினால் முன்னொருபோதும் நடைபெறாத  இனவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இவை அனைத்தும் பதவியில் உள்ளவர்கள் அவர்களது ஊழல் மோசடிகளை மறைக்கவும் பதவியை தக்க வைத்துக்கொள்வதற்காகவும் பதவியில் இல்லாதவர்கள் அவர்களால் முன்பு செய்யப்பட்ட ஊழல் மோசடிகளை மறைத்து மீண்டும் பதவியை பெற்றுக்கொள்வதற்காக தயாரிக்கப்பட்ட நாடகமே தற்போது அரங்கேறிக்கொண்டிருக்கிறன்றன.

 இவ்வாறான சூழ்நிலையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதக் குழுக்களை கட்டுப்படுத்துவதற்கு அரசு அசமந்தமாகவே செயற்பட்டதையும் வன்மையாகவே கண்டிக்க வேண்டுமெனவும் மேலும் அவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)