நாட்டுக்கு பாரிய வெளிநாட்டு வருமானத்தை ஈட்டவும், கிராமிய மக்களின் பொருளாதாரத்தை தாமாக பலப்படுத்துவதற்கும் மாவட்ட மட்டத்தில் அலங்கார மீன் வளர்ப்பு மையங்கள், மீன் ஏற்றுமதி வலயங்களை அமைத்து உலகில் பரந்தளவில் கேள்வியுள்ள கடல் மீன்கள் மற்றும் கடல் தாவர (கடல் பாசி)  வளர்ப்பினை ஆரம்பிப்பதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆரச்சி அவர்கள் தெரிவித்தார். 

இராஜாங்க அமைச்சர் தெரிவித்தது, அந்த வேலைத் திட்டத்திற்கு சமாந்தரமாக உலகில் அதிக கேள்வியும், பெறுமதியும் மிக்க மீன்களை இலங்கையில் வளர்க்க  கடல் கூண்டுகளில் (Sea Cages) மீன் வளர்ப்பின் முதல் கட்ட வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு 15, மட்டக்குளி, காக்கைதீவில் இருக்கும் தேசிய நீர்வள மேம்பாட்டு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஸ்தாபிக்கப்பட்ட மீன் வளர்ப்பு நிலையம் மற்றும் கடல் தாவர வளர்ப்பு நிலையம் ஆகியவற்றை திறந்து வைக்கும் நிகழ்விலேயே இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சி மேற்கண்டவாறு உரையாற்றினார்.

இந்நிகழ்வில் விவசாயம், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன், அமைச்சின் செயலாளர் கே.டீ.எஸ்.ருவன்சந்த்ர NARA நிறுவனத்தின் தலைவர் ஏ.டீ.எதிரிசிங்க உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

ரிஹ்மி ஹக்கீம்,
விவசாயம், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அபிவிருத்தி அமைச்சு







கருத்துரையிடுக

Blogger இயக்குவது.