கோத்தாபய தான் எமது ஜனாதிபதி வேட்பாளர் என்று மஹிந்தவுக்கோ, நாமலுக்கோ பகிரங்கமாக சொல்லச் சொல்லுங்கள்

கோத்தாபய சித்தப்பா தான் எமது ஜனாதிபதி வேட்பாளர் என்று நாமலுக்கு வந்து சொல்லச் சொல்லுங்கள் என்று விவசாயம், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில், நீரியல் வளத்துறை அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன் அவர்கள் கருத்துத் தெரிவித்தார். அநுராதபுரம், மஹவிலாச்சியவில் நடைபெற்ற "தியவர நேயோ" நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நேரம் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார்.

அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது, "மஹிந்த ராஜபக்ஷவுக்கு வெளியில் வந்து கூறச் சொல்லுங்கள், அடுத்த ஜனாதிபதி அபேட்சகர் கோத்தாபய என்று. அதே போன்று நாமல் ராஜபக்ஷவிடம் கூறுங்கள் ஊடகங்கள் முன் வந்து, எமது ஜனாதிபதி அபேட்சகர் கோத்தாபய சித்தப்பா என்று. அவ்வாறு கூறுவதில்லையே. காரணம் கோத்தாபய வருவதற்கு அதிகம் வெறுப்பு காட்டுவது ராஜபக்ஷ குடும்பம் ஆகும்.

ஜனாதிபதித் தேர்தல் கெசட் செய்ததன் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்போம். நாம் 19வது திருத்தத்தை கொண்டு வந்தது 18 சரியில்லை என்பதனால்தான். அதன் மூலம் தான் ஊடகவியலாளர்களான உங்களுக்கும் பயமின்றி பேச முடிந்துள்ளது.

முஸ்லிம் அமைச்சர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து வெளியேறிய பின்னர் அவர்கள் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்வது குறித்து ஆராய்ந்து பார்ப்பார்கள்" என்று மேலும் தெரிவித்தார்.

ரிஹ்மி ஹக்கீம்,
விவசாய, கால்நடை அபிவிருத்தி,  நீர்ப்பாசன மற்றும் கடற்றொழில், நீரியல் வளத்துறை அபிவிருத்தி அமைச்சு
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here