கைதிகளுக்குப் புனர்வாழ்வளிப்பது தொடர்பில் அவர்களுக்கு கைத்தொழில் பயிற்சி திட்டங்களை வழங்குவது குறித்து தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை (நைற்றா)மூலம் நடவடிக்கை எடுக்கத் திட்டமிடுகின்றது.
இதுகுறித்த முக்கிய கலந்துரையாடல் ஒன்று அண்மையில் நைற்றா நிறுவனத் தலைவர் நஸிர் அஹமட்டுக்கும் சிறைத் துறைசார் அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்றது.
சிறையிலுள்ள கைதிகளின் வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்கு உதவும்வகையில் அவர்க ளுக்குத் கைத்தொழில் பயிற்சிகளை வழங்குவதுடன் அதனைப் பூர்த்தி செய்தவர்க ளுக்கு அரச அங்கீகாரமுள்ள சான்றிதழ்களை வழங்கவும் எதிர்காலத்தில் இதன் மூலம் அவர்கள் சமூகத்தில் நற்பிரஜைகளாக வாழ்வதற்கான நடைமுறைகளை அறிமுகம் செய்யவும் இதன்போது ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.
நைற்றா நிறுவனம் தற்போது 16 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட இருபாலாருக்கும் பல்வேறு கைத்தொழில் பயிற்சிகளை வழங்கிவருவதுடன், தகவல் தொழில் நுட்பம் குறித்த புதிய பாட விதானங்களை அறிமுகம்செய்து அவற்றுக்கான பயிற்சி களையும் மேற்கொண்டு வருகின்றது. இந்த பயிற்சிகளைப் பூர்த்தி செய்பவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு அவர்கள் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற் கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றன.
இந்த நடவடிக்கை காரணமாக நாட்டின் அணைத்து பகுதிகளிலுமுள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர், யுவதிகள் தமது வாழ்கை வளமேம்பாட்டுக்கான பயிற்சி களை பெற்றுவருவதுடன் தொழில்துறை வாய்ப்புக்களையும் பெற்று வருகின்றனர்.
மேற்படி நிறுவனத்தின் தவைராக நஸிர் அஹமட் பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் பல்வேறு புதிய செயற்றிட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்த நிறுவனத்தில் பயிற்சியை பெற்றுக்கொண்டவர்கள் தமது மேலதிக கல்விக ளை வெளிநாடுகளிலுள்ள அரச,தனியார் பல்கலைகழங்களில் பெற்றுக்கொள்ளவும்; முன்பள்ளி ஆசிரியைகள் தமது கல்விமேம்பாட்டை வளர்த்துக் கொள்ளுவதற்கான பயிற்சித்திட்;டங்களும் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக தனியார் தொழில் துறைகளில் இளையவர்கள் வாய்ப்புகளைப்பெற கூட்டுறவுப் பயிற்சித் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன.
அந்தவகையில் சிறைக் கைதிகள் மற்றும் மனநிலை பாதிப்பிற்கு உள்ளானவர் களின் மேம்பாட்டுக்கான பயிற்சிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.




கருத்துரையிடுக

Blogger இயக்குவது.